Mamata Banerjee [file image]
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். கொல்கத்தா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதில், பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து கொல்கத்தா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஊழியர் இதுகுறித்த வீடியோவும் வெளியிட்டு இருந்தார். அதனை பார்த்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, பர்த்வான், ரெய்னாவில் நடந்த தேர்தல் பேரணியில் பேசுகையில் , ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படும் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் பற்றி அந்த பெண் பேசும் வீடியோ பதிவை பார்க்கும் போது எனது இதயத்தில் ரத்தம் கொட்டியது. இதுபற்றி செய்திகள் வாயிலாக தெரிந்து இருந்தாலும் தற்போது தான் வீடியோ பார்த்ததாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
இனிமேல் ராஜ்பவனில் வேலைக்குச் செல்லமாட்டேன் என்று அந்தப் பெண் சொல்லிவிட்டாள். அந்த பெண் பயப்படுகிறாள். மீண்டும் தவறாக நடந்துகொள்வார்களோ என் பயப்படுகிறாள் என மம்தா கூறினார். மேலும், சந்தேஷ்காலி பாலியல் புகார் குறித்து பற்றி பேச இனி போஸுக்கு உரிமை இருக்கிறதா.? என்றும் அவர் விமர்சித்தார்.
இனி சந்தேஷ்காலி புகார்கள் குறித்து உங்களால் கருத்து கூற முடியுமா? சந்தேஷ்காலியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நிர்வாக நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். மேலும் அந்த நிலைமையை நாங்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததை மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டினார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…