”த.வெ.க இன்னொரு பா.ஜ.க.. அங்க எல்லாமே ஏமாற்றம் தான்..” தவெக TO திமுக வைஷ்ணவி பளிச்.!

தவெக-வில் இருந்து விலகிய இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி, செந்தில் பாலாஜி தலைமையில் திமுக-வில் இணைந்தார்.

tvk vijay - vaisanvi

கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று குற்றம்சாட்டி வைஷ்ணவி கட்சியில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து, இன்றைய தினம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அவர் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடைம் பேசிய அவர், ”தவெகவில் ஒரு வருடமாக பயணித்தேன், நான் கடந்த மே 3 ஆம் தேதி தவெகவில் இருந்து விலகினேன். நான் ஒருபோதும் பதவிக்காக ஆசைப்பட்டது கிடையாது, எனது நோக்கம் சமூக பணி செய்வதே.

தினமும் மக்களுக்கு என்னால் ஏதாவது உதவி செய்துவிடமுடியாதா? என்றே நான் என் தினப் பொழுதை கடந்து வருகிறேன். தவெகவில் இருந்து விலகிய போதும் கூட எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தினமும் என்னால் முடிந்த மக்கள் பணியைச் செய்து வந்தேன். தவெகவில் இருந்து விலகியவுடன் பல கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தபோதும், நான் உடனே எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இளைஞர்களை ஊக்குவிப்பார்கள் என்று நினைத்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது தவெகவின் மற்றொரு திரை பாஜக என்பதால்தான் திமுகவில் இணைந்துவிட்டேன். சமீப காலமாக ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த சிலர் என்னையும், என் குடும்பத்தையும் விமர்சிப்பதை பார்க்கிறேன். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான் ‘நண்பா.. நண்பீஷ்.. கருத்தை கருத்தியலாக எதிர்கொள்வோம்.. களத்தில் சந்திப்போம்..’ என்று பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்