ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களிலிருந்து நாம் நாட்டை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்பது வீடுகள்தோறும் எதிரொலிக்க தொடங்கி விட்டது.நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு தொழில் முனைவோர் முன்வர வேண்டும்.
அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பிலே உருவாக்கம் பெற்ற பொருள்களையே பயன்படுத்துவோம் என்று முடிவு செய்து கொள்வோம். வரும் புத்தாண்டில் இந்த உறுதிப்பாட்டை மேற்கொள்வோம்.
நாம் குப்பையை ஏற்படுத்த மாட்டோம் என்ற உறுதிப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும் .ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து நாம் நாட்டை விடுவிக்க வேண்டும். இதுவும் 2021ஆம் ஆண்டுக்கான உறுதிப்பாடுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…