குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் அடுத்த திட்டமாக தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) திட்டத்திற்கு பல எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. அசாம் மாநிலத்தில் 1951-க்கு பிறகு சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரித்து வெளியிடப்பட்டது.அதில் 14 லட்சம் பேர் பெயர்கள் விடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில் கடப்பா நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி “தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம்” என கூறினார்.
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின்…
பாங்காக் : தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…
பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…