தீர்வு வந்தால் தான் ஆசிய கோப்பையில் பங்கேற்போம் – சாக்ஷி மாலிக்

பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததால் தான் ஆசிய கோப்பை போட்டியில் கலந்துகொள்வோம் என சாக்ஷி மாலிக் திட்டவட்டம்.
சோனிபட்டில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பாலியல் புகார் தொடர்பான பிரச்னையை தீர்த்தால்தான் ஆசிய போட்டிகள் பங்கேற்போம். உளவியல் ரீதியாக வீராங்கனைகள் எத்தகைய பாதிப்புகளை சந்தித்துள்ளனர் என்பதை மத்திய அரசு உணரவில்லை. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போம்.
நாங்கள் ஒவ்வொரு நாளும் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம் என்பதை பிறரால் உணர முடியாது என தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யான, பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள அமைச்சரின் இல்லத்துக்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் புதன்கிழமை சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பங்கஜ் புனியா, நாங்கள் சில விஷயங்கள் குறித்து விவாதித்தோம். பிரிஜ் பூஷன் மீதான போலீஸாரின் விசாரணை ஜூன் 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
இதனால் விசாரணை முடியவடையும் வரை போராட்டம் நடத்த வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததால் தான் ஆசிய கோப்பை போட்டியில் கலந்துகொள்வோம் என சாக்ஷி மாலிக் திட்டவட்டமாக கூறியுள்ளார்.