மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி தொடரும் என்று டைம்ஸ் நவ் – சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பிரபல ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் 8-ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில், மேற்குவங்கத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன்படி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி தொடரும் என்று டைம்ஸ் நவ் – சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பை ரிபப்ளிக் டிவி – சிஎன்எக்ஸ் மற்றும் ஏபிபி – சிவோட்டர் நடத்தி வெளியிட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி – சிஎன்எக்ஸ் முடிவு:
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி: 128-138
பாஜக கூட்டணி: 138-148
சிபிஎம் கூட்டணி: 11-21 இடங்கள் வரை வெற்றிபெறும்.
டைம்ஸ் நவ்- சி வோட்டர்:
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி: 152-164
பாஜக கூட்டணி: 109-121
சிபிஎம் கூட்டணி: 14-25 இடங்கள் வரை வெற்றிபெறும்.
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…