RahulGandhi Camp [Image Source : PTI]
பிரதமர் மோடி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார், ஆனால் கர்நாடகாவை பற்றி பேசுவதில்லை, தன்னை பற்றி தான் பேசுகிறார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கர்நாடா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி குறித்து, ராகுல் காந்தி கடுமையாக சாடினார். கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய ராகுல் கூறியதாவது, பிரதமர் மோடி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார், ஆனால் கர்நாடகாவை பற்றி பேசுவதில்லை, தன்னை பற்றி தான் பேசுகிறார் என்று கூறினார்.
இந்த தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல, இது கர்நாடகா மற்றும் அதன் மக்களுக்கானது. இதை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், காங்கிரஸ் தன்னை 91 முறைஅவமதித்ததாக பிரதமர்கூறினார், ஆனால் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி அவர் எதுவும் பேசவில்லை என்றும் ராகுல்தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகாவில் ஊழல் மற்றும் 40% கமிஷனையும் தடுக்க என்ன செய்தீர்கள் என்றும் ராகுல் காந்தி, பிரதமர் மோடியிடம் கேள்வியெழுப்பினார்.
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…