பிளஸ்-2 பொது தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஓராண்டிற்கு மேலாக மூடப்பட்டு தான் காணப்படுகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வித்துறை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியமானது என்பதால் பிளஸ் டூ தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று உறுதியாக உள்ளது. ஆனால், கொரோனா சூழ்நிலையில் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிளஸ்-2 பொது தேர்வு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. காணொலி காட்சி மூலம் இந்த கூட்டம் 11:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திலிருந்து அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…