நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு? – தீர்ப்பு ஒத்திவைத்த நீதிமன்றம்

Published by
Venu

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை அறிவிக்கக்கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இதன் பின்னர்  தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.

எனவே டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை அவசரமாக விசாரிக்கக்கோரி  நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முறையிடப்பட்டது. இதையடுத்து வழக்கை பிப்ரவரி 11-ஆம் தேதி விசாரிப்பதாக  நீதிபதிகள் அறிவித்தனர்.

இதன்படி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,விசாரணை நீதிமன்றத்தை அணுகி புதிய தேதியை பெற்று கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்நிலையில்  புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.மேலும் வழக்கில் தற்போது உத்தரவு பிறப்பித்தால் மேலும் சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

3 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

5 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago