SWiggy [file image]
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஒருவர் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்த தனது சிக்கன் பிரியாணியில் புழு இருப்பதாக சாய் தேஜா என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த சிக்கன் பிரியாணியில் இருக்கும் ஒரு கறி துண்டில் புழு கிடப்பதை சாய் தேஜா புகைப்படங்கள் பகிருந்தார்.
ஸ்விகியில் ஆர்டர் செய்த அந்த சிக்கன் பிரியாணிக்காக ரூ.318 அவர் கொடுத்ததாகவும், இதனை குறித்து ஸ்விகியிடம் தெரிவித்த போதிலும் அவருக்கு ரூ.64 மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை அன்று நடந்துள்ளது,
மேலும் பிரபலமான கடையில் இருந்து ஆர்டர் செய்த உணவில் இது போன்ற புழு கிடந்துள்ளதால் மக்கள் சற்று அதிரிச்சியில் இருந்து வருகின்றனர். மேலும், இது சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சாய் தேஜா அவரது X தளத்தில் ஸ்விகி ஊழியரிடம் பேசிய ஸ்க்ரீன் ஷாட், மற்றும் அந்த புழு கிடந்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் அவர், “தயவு செய்து மெஹ்ஃபில் குகட்பல்லி கடையில் இருந்து (Mehfil Kukatpally) ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள். நான் வாங்கிய பிரியாணியில் புழு கிடந்தது, அதற்கு நஷ்ட ஈடாக ஸ்விகி எனக்கு ரூ.64 திரும்ப அளித்துள்ளது”, என பதிவிட்டிருந்தார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…