அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று முதல் ஓபன் – யோகி ஆதித்யநாத் உத்தரவு.!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்படும் என யோகி ஆதித்யநாத் உத்தரவு.
நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் நான்காம் கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கால் நாடு கடும் பொருளாதார சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது, இதன் கீழ் அனைத்து மாநில அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இன்று முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவின்படி, அனைத்து அலுவலகங்களும் 3 ஷிப்டுகளிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 3 ஷிப்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். அனைத்து ஊழியர்களும் மாற்று நாளில் அலுவலகத்திற்கு வரும் வகையில் துறை அல்லது அலுவலகத் தலைவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பட்டியலை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனுடன், ஒவ்வொரு பணியாளரும் தங்கள் செல்போனில் ஆரோக்யா சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025