தினமும் 10 கிலோமீட்டர் ஓடி வீட்டிற்கு செல்லும் இளைஞரின் வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது.
நொய்டாவில் ஒரு வாலிபர் தனது தோளில்பையை மாட்டிக்கொண்டு சாலையில் ஓடுகிறார். எழுத்தாளரும், இயக்குனருமான வினோத் காப்ரி தனது காரில் வா நான் உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் அந்த வாலிபர் வேண்டாம் என கூறி விட்டு தொடர்ந்து ஓடுகிறார். அவரது பெயர் என்ன என்று கேட்டபோது, பிரதீப் மெஹ்ரா என்று கூறினார். ஏன் இப்படி ஓடுகிறீர்கள் என்று கேட்டதற்கு பிரதீப் ஆச்சரியமான பதில் அளித்தார்.
இப்போது எனக்கு ஓட வேண்டிய நேரம், ராணுவத்தில் சேர வேண்டும். அதனால்தான் இப்படி ஓடுவதாக பிரதீப் பதிலளித்தார். காலையில் தானே ஓடவேண்டாம் என்று வினோத் கேட்டபோது, சமைக்கவும் வேலைக்குப் போகவும் நேரம் சரியாக உள்ளது என்று பிரதீப் கூறினார். வினோத் ஓடிக்கொண்டிருந்த பிரதீப்பை காரில் துரத்திச் சென்று பிரதீப்பின் வீட்டு வேலைகளைப் பற்றிக் கேட்டபோது தனது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது மூத்த சகோதரருடன் தங்கியுள்ளார். லிப்ட் வாங்கி சென்றால் பயிற்சி நின்றுவிடும் என பிரதீப் கூறினார்.
இதுகுறித்த வீடீயோவை ட்விட்டரில் வினோத் காப்ரி பகிர்ந்த பின்னர் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோடா பகுதியை சேர்ந்தவர் பிரதீப் மெஹ்ரா( 19) பிரதீப் மெக்டொனால்டு ஊழியர் ஆவார். தன்னுடைய வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்பும் போது பிரதீப் மெஹ்ரா தினமும் 10 கிமீ ஓடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…