Youtuber Avinash Rajput [file image]
நொய்டா: நொய்டாவில் மேற்கு பகுதியில் பிரபல யூடியூபரான அவினாஷ் ராஜ்புத் பிரதான சாலையின் நடுவே மர்ம நபர்களால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அந்த மர்ம நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அவினாஷ் ராஜ்புத் எனும் யூடியூபர், தனது அதிகாரப்பூர்வ யூடியூப் கணக்கில் வீடியோவைப் பதிவிட்டு வருபவர், அவருக்கு நேர்ந்த இந்த கசப்பான சம்பவத்தை பற்றி வீடியோ வெளியிட்டு பேசி இருந்தார். அந்த வீடியோவில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவினாஷ் தனது சகோதரியை பார்க்க நொய்டா சென்று விட்டு திருப்பி வந்த போது கவுர் சிட்டி மாலுக்குச் சென்றுள்ளார், அங்கு சிலர் இவருக்காக காத்திருந்துள்ளனர். வணிக வளாகத்துக்குள் சென்ற யூடியூபர் அவினாஷையும் அவரது நண்பர்களையும் அங்கு இருந்த அந்த மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் அவரது நண்பர் ஒருவர் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மேலும் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் அவினாஷின் காரையும் சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும், அவினாஷ் மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அந்த 4 பேரும், யூடியூபர் அவினாஷ் ராஜ்புத் தங்கள் சாதியை புண்படுத்தும் வகையில் ஒரு வீடியோவில் பேசினார் என்றும் அதற்காக தான் அவரை தாக்கினோம் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…
டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி,…
சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…
சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…