குண்டர் சட்டத்தில் முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேங்ஸ்டர் மற்றும் அரசியல்வாதியான முக்தர் அன்சாரிக்கு 2009 குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் அன்சாரியின் கூட்டாளி சோனு யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த […]
தேசிய தலைநகரான டெல்லியில் எஸ்யூவி மோதியதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 24ம் தேதி அதிகாலை 1 மணியளவில் கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பணியை செய்துகொண்டிருந்துள்ளார். கானாட் பிளேஸ் பகுதியில் சோதனை செய்துகொண்டிருக்கும் போது, போலீஸ் அதிகாரி பேரிகேடு அருகே நின்று ஒரு காரில் இருக்கும் நபருடன் பேசிகொண்டுள்ளார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த எஸ்யூவி கார், அவர் மீது […]
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தருமபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொணட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது குறித்து, தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் வரும் சமயத்தில், ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பாதுகாப்பில் குளறுபடி இருப்பதை தான் காட்டுகிறது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம், ரவுடிசம் தலை […]
இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் வழக்கு தொடர்ந்த நிலையில், அரசின் அனுமதியை பெற உத்தரவிடப்பட்டது. தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது. சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மாநகர போலீஸ் கமிஷ்னரிடம் அண்ணாமலை மீது புகார் ஒன்றை […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்கான நிதியினை விடுவிக்கக் கோரி, மாண்புமிகு ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாட்டில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகியிருக்காது. விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்பதை நான் ஆமோதிக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால், விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்பதை சொல்ல தகுதி மற்றும் நேர்மை ஆளுநருக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். வல்லபாய் படேலுக்கு சிலை வைத்துள்ளார். அதே வ.உ.சி-க்கு சிலை வைத்திருக்கிறாரகளா? […]
நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை முன்பு வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டு (தடுப்பு பலகை) மீது கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் பாட்டில் வீசினார். ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திலேயே கருக்கா வினோத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஆளுநர் மாளிகை தரப்பில் […]
கத்தாரில் உள்ள ‘தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டென்சி சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தில், இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வருடம், கத்தார் அரசு இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து, இந்த 8 அதிகாரிகளுக்கும் கத்தார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. தெரு நாய்க்கு நெதர்லாந்து பெண் […]
நிலவில் ஆக.23-ம் தேதி தரையிறங்கிய போது சந்திரயான்-3 விண்கலம் 2.06 டன் புழுதியை கிளப்பியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 (விக்ரம் லேண்டர்) விண்கலம் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதைகளில் பயணித்து ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இந்தியாவின் […]
இந்தியாவை ஜெயா என்ற தெரு நாய் நெதர்லாந்தை சேர்ந்த தனது புதிய உரிமையாளருடன் முறையான விசா மற்றும் பாஸ்போர்ட்டுடன் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளது. ஆம், உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சுற்றித்திரிந்த தெரு நாயை தத்தெடுத்து அதற்கு முறையான பாஸ்போர்ட் விசா எடுத்து, நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சி சம்பவம் இந்தியர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாம் சேர்ந்த மெரல் பொன்டென்பெல் என்ற வெளிநாட்டு பெண்மணி, சுற்றுலாவுக்காக […]
சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஜூலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பர போஸ்டரில் முதல்வர் புகைப்படத்தை அகற்றி பிரதமர் புகைப்படத்தை ஒட்டி விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, கொடிக்கம்பம் […]
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுங்கப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் அமர் பிரசாத் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு இருந்த […]
மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் எனும் இந்திய அளவிலான பொது நுழைவு தேர்வு என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நீட் நுழைவு தேர்வு முறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசு 2 முறை நீட் விலக்கு குறித்த மசோதவை நிறைவேற்றி உள்ளது. முதலில் 2021இல் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதன் பிறகு, மீண்டும் […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சார்பாக, ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு அவர் ராஜினாமா செய்து, பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார். பல்வேறு அரசியல் நகர்வுக்கு பின்னர் ஒன்றிணைந்த எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் , முறையே தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து வந்தனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களை கைப்பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அப்போது எதிர்கட்சி தலைவராக எடப்பாடி […]
அடுத்தாண்டு மே மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அவர் கூறியதாவது, வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் தொடக்கமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்று ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். நவம்பர் 4, […]
நேற்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் சென்னை வந்தடைந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா ஆகியர் உடன் இருந்தனர். இந்த நிலையில், சென்னை, உத்தண்டியில் இந்திய கடல்சார் பல்கலைகழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி. அமைச்சர் பொன்முடி […]
காசா பகுதியில் இதுவரை இஸ்ரேலிய நடத்திய வான்வழித் தாக்குதலில், தாங்கள் பிடித்து வைத்திருந்த கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு , இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 20 நாட்களாக பதில் தாக்குதலை ஓயாமல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவிகளை செய்து […]
கடந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக ஜெனரல் எஸ்.வி.ஆர் என்ற டெலிகிராம் சேனல் தகவல் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று விளாடிமிர் புதின் மாஸ்கோவிற்கு வடக்கே வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 8:42 மணியளவில் உயிரிழந்தார் என்று செய்தியை வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. புதின் இறந்துவிட்டதாக செய்தியை பரப்பிய டெலிகிராம் சேனல் ரஷ்யாவில் ஆட்சி கவிழ்க்க சதி நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த சேனலில் வெளியான […]
சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் இன்று காலை காலமானார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) தலைவரான அவர் 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக பதவி வகித்திருக்கிறார். 68 வயதாகும் அவர், கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து விடுமுறையை கொண்டாட ஷாங்காய் சென்றிருந்தபோது திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது. தற்போது, அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லீ கெகியாங்-க்கு நேற்று திடீரென […]
சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமணவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த திருமணவிழாவில் முன்னின்று மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் அவர்கள், பெரிய பெரிய பதவியில், பெரிய மாளிகையில் இருந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இப்படி கேட்பவர்களின் பதவி என்பதே வேஸ்ட். திராவிடம் என்றால் என்ன என்று உங்களை கேட்கவைத்துள்ளது தான் திராவிடம். ஆளுநரின் நோக்கம் முறியடிக்கப்படும் – வைகோ […]