சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுகியிருந்தார். அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பாமக சார்பிலும் சமூக நீதியை காப்பதற்காக சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னை தி.நகரில் […]
சத்தீஸ்கரின் கபீர்தாம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) தசார விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது, தனது தாத்தாவுடன் அங்கு நடைபெற்ற தசார விழாவைக் காணச் சென்ற மூன்று வயது சிறுமியை 40 வயதான ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கவர்தா சிட்டி கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது சிறுமிக்கு தாகம் எடுத்ததால், அருகில் உள்ள வீட்டிற்கு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பி […]
உக்ரைன் மற்றும் காசாவில் போர் நடைபெற்றுவரும் நிலையில் ரஷ்யா அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அணுசக்தி சோதனைக்கு எதிராக ரஷ்யா, உலக அளவில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அணு ஆயுதங்களை தயாரிப்போம் எனவும், ஆனால் அணு ஆயுத சோதனை செய்ய போவதில்லை என்று ஒப்பந்தம் செயப்பட்டு இருந்தன. இந்த நிலையில், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்யும் மசோதாவிற்கு ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தற்போது, அந்த ஒப்பந்தத்தின் […]
பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ் அமைப்பு இம்மாதம் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரல் ராணுவம் தற்போது வரை காசா நகர் மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. காசா நகர் ஹமாஸ் அமைப்பினரின் உறைவிடமாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா நேரடி ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் […]
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற என் மண் என் தேசம் நிகழ்ச்சியில் அமிர்த கலச யாத்திரையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தொடங்கி வைத்தார். இதன்பின் ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, சுதந்திர போராட்டத்திற்காக போராடிய மருது சகோதர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம். சுதந்திர போராட்டம் 1801ல் தொடங்கியது. […]
மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு இந்திய அளவில் பொது நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். இதனை எதிர்த்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என்றும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சில மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் சோக நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறுவதாக கூறி அதனை தமிழகத்தில் தடை செய்ய ஆளும் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு, சட்டப்பேரவையில் தீர்மானம் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது […]
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பொறுப்பேற்றதில் இருந்து, அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசு இயற்றும் மசோதாக்களுக்கு கையெழுத்து இடாமல் நிலுவையில் வைப்பது, அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பது கண்டத்துக்குரியதாக மாறியது. ஆளுநரின் செயலும் தமிழக அரசுக்கு எதிராக உள்ளது. பொது நிகழ்ச்சிகளில் அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை ஆளுநர் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை இல்லை என பல்வேறு கருத்துக்களை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.7,500 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இன்று மகாராஷ்டிரா செல்லும் அவர், 86 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ‘நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம், 86 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் அவர், புதிய […]
நவம்பர் மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் தென்னிந்திய மாநிலத்தில் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலும் ஒன்று. இது பாஜகவுக்கு முக்கியமான தேர்தலும் கூட. கடைசியாக கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பின்னர், தென்னிந்தியாவில் முற்றிலும் சட்டப்பேரவை ஆட்சியை இழந்த தேசிய கட்சியாக பாஜக மாறிவிட்டது. அதனால், வரும் தெலுங்கானா தேர்தலில் முதன்முறையாக ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. அதே போல கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய தெம்புடன் , எதிர்க்கட்சியாக தெலுங்கானாவில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கூடுதல் நம்பிக்கையுடன் […]
ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் பேசிய பேச்சு குறித்த கேள்விக்கு ‘புராணம் படிக்கவில்லை’ என்று பயந்து பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘சாதனை நாயகர்’ தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி குறை சொல்வதா? என்று திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ஏறத்தாழ மூன்றாண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருந்து மக்களைப் பற்றி கவலைபடாமல், தன்னையும், தனது அடிபொடிகளையும் வளமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஒரு மூட்டை பொய்களை […]
கர்நாடகாவில் சிக்கபல்லபுரம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்கபல்லபுரம் மாவட்டம் பாகெப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்பறம் கார் மோதி ஒரு குழந்தை, பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற கார் நிறுத்தப்பட்டிருந்த லாரி மோதி விபத்தில் சிக்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து 3 வயது குழந்தை, பெண்கள் மற்றும் ஆண்கள் என மொத்தம் 14 பேர் டாட்டா சுமோவில் […]
சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. ஒருபக்கம் தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற பிரதான கட்சியான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஏனென்றால், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு, இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால், […]
அமெரிக்காவில், மைனே மாகாணத்தில், லூயிஸ்டன் நகரத்தில் நேற்று (புதன்) இரவு வணிகவளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். லூயிஸ்டன் நகர வணிக வளாகத்தில் உள்ள பார், உணவகம், சூப்பர் மார்க்கெட் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து அந்த மர்ம நபர் நவீன ரக துப்பாக்கி கொண்டு சரமாரியாக சுட்டுள்ளான். சம்பவம் நடத்திய மர்ம நபர் இன்னும் கிடைக்கவில்லை என்றும், […]
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். இன்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வர உள்ளார். குடியரசு தலைவருக்கு தமிழக அரசு சார்பில் வழக்கமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. சென்னை, கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக திரௌபதி முர்மு தமிழகம் வர உள்ளார. இன்று மாலை தமிழகம வரும் அவர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க வைக்கப்பட உள்ளார். […]
உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அமைப்பு சார்பில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணிகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 2024 ஜனவரி மாதம் 22ஆம் தேதி இதன் திறப்பு விழா […]
நேற்று ஆளுநர் மாளிகை 1வது மெயின் கேட் முன்பு உள்ள பேரிகார்ட (தடுப்பு அரண்) அருகில் பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரிகார்ட் பக்கம் பெட்ரோல் குண்டு வீசிய உடனேயே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கருக்கா வினோத்-ஐ தடுத்து உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்திடம் இருந்து வீசுவதற்கு வைத்து தயார் நிலையில் வைத்து இருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட […]
523-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் மெயின் கேட் முன்பு தேனாம்பேட்டை பகுதியியை சேர்ந்த கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர் வினோத்தை கைது செய்து உள்ளனர். இவர் இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி அதன் பெயரில் சிறை தண்டனை பெற்று சென்ற வாரம் தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]
முன்னதாகே இஸ்ரேல் ராணுவம், சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கு மற்றும் பாதுகாப்பு ரேடார் நோக்கி தாக்குதல் நடத்தியதில் 8 சிரியா ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு சிரியா கண்டனம் தெரிவித்தது . ஆனால் மேற்கண்ட தாக்குதலை அடுத்து டேரா மற்றும் அலப்போ விமான நிலையத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதில் அலப்போ விமான நிலையம் கடந்த 2 வாரங்களில் மட்டும் 4 முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இன்றுவரை ஹமாஸ் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்த நிலையில், தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை […]