வரும் நவம்பர் மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும், ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சியும், 2 மாநிலத்தில் மாநில கட்சிகளின் ஆட்சியும் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக பூபேஷ் பாகேல் பொறுப்பில் இருக்கிறார். சத்தீஸ்கரில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. […]
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, ஜூலை 1 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. […]
தமிழகத்தில் வரும் 29ம் தேதி 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று (24ம் தேதி) காலை மத்திய வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயலான ஹமூன், நேற்று மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவிழந்தது. இந்த தீவிரப்புயல் இன்று (25ம் தேதி) காலை 1.30-2.30 மணி அளவில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு நோக்கி நகர்ந்து, […]
அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் இன்று அமமுக கழக மகளிரணி துணைச் செயலாளர் சண்முககுமாரி அவர்களின் இல்ல திருமண விழாவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை ஏற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். அப்போது யாருடன் […]
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், டி.ஆர்.பாலு ஆளுநர் பற்றி விமர்சித்தது, நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து என பல்வேறு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். டி.ஆர்.பாலு நேற்று ஆளுநர் ரவி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கண்டன அறிக்கையை திமுக சார்பில் வெளியிட்டார். அதில் ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரவாக ஆளுநர் ரவி செயல்படுவதாகவும், சுதந்திர போராட்ட வீரர்களை திமுக அரசு பல்வேறு வகைகளில் கௌரவித்துள்ளது என […]
மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை பெற்றார் திண்டுக்கல் சீனிவாசன். இதன்பின், தங்கக் கவசத்தை பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். சமீபத்தில், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்க கவசம் […]
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 19 நாட்களாக மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மற்றும் தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலிருந்தும் குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று போரில் இதுவரை காசாவில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை […]
அடுத்த வருடம் ஏப்ரல் , மே மாதங்களில் நாடு முழுக்க மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் பிரதான அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது போல, இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யாபிரபா சாஹூ தலைமையில் , தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் நவம்பர் 27ஆம் தேதி […]
சுதந்திர போராட்ட வீரர்கள் விவகாரம் தொடர்பாக ஆளுநரின் விமர்சனத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தமிழகத்தில் உரிய மரியாதை அளிக்கவில்லை என்பதற்கு பதில் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், விடுதலை போராட்ட வீரர்கள் குறித்த ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த சூழலில், போராட்ட […]
இன்று தஞ்சை பெரிய கோவிலில் 1038வது சதய விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன், தான் சோழ தேசத்து மன்னனாக முடிசூட்டிக்கொண்ட ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் இந்த சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே போல ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் தான் ராஜ ராஜ சோழன் பிறந்தார் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கி.பி.985ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் முடிசூட்டிக்கொண்ட அருண்மொழி வர்மன் […]
நவம்பர் 4ம் தேதி 37 மாவட்டங்களில் ஹெல்த்வாக் சிஸ்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நவ.4 அன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் 37 மாவட்டங்களிலும் தொடங்கப்படவிருக்கின்ற “நடப்போம், நலம் பெறுவோம்” HEALTH WALK 8 KM நடைபாதையில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், நவம்பர் 4ம் தேதி 37 மாவட்டங்களில் ஹத்வாக் சிஸ்டம் தொடங்கப்பட உள்ளது. மாதந்தோறும் முதல் […]
ராபர்ட் கால்டுவெல் எழுதிய ஆரிய – திராவிட இனவாத கட்டுக்கதை தான் திமுகவின் அடிப்படை கொள்கை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பாரதம் விடுதலை அடைந்த தினத்தை கருப்பு நாளாக அறிவித்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளை, மக்கள் நினைவிலிருந்து அகற்ற முயற்சிகள் நடக்கின்றன. மகாத்மா காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் […]
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நேரத்தில் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்த நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 20ஆம் தேதி துவங்கி, 4,5 நாட்களை கடந்து தற்போது பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும், மலேரியா, டெங்கு, சேத்துப்புண், சளி, […]
522-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மறுபக்கம் மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை […]
டெல்லியில் காற்று மாசுபடுவதைத் தடுக்க நாளை முதல் 40 கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்து வருகிறது. தலைநகரில் காற்று மாசுபடுவதைத் தடுக்க, 40 கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பொதுமக்கள் […]
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பாஹ் பிளாக்கில், 8 வயது சிறுமி ஒருவர் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று கொண்டிருந்த போது தெருநாய்களால் தாக்கப்பட்டுள்ளார். குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது. குழந்தை வீடு திரும்பிய பின்னர் இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தாலும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. இதனை கவனிக்காமல் விட்ட நிலையில் சிறுமியின் உடல் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, சிறுமி பாஹ் சமூக சுகாதார மையத்திற்கு […]
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் தனி தனியே இஸ்ரேலுக்கு சென்று அலோசனை நடத்தியதோடு, தங்களது முழு ஆதரவையும் இஸ்ரேலுக்கு வழங்குவதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து, தற்போது இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்சென்றுள்ளார். அங்கு அவர் இஸ்ரேலிய பிரதமர் […]
தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம், இன்றுவரை தொடர்ந்து 18 நாட்களாக பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலால் காஸா பகுதியில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் […]
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழகம் புண்ணிய பூமி; இங்கு ஆரியம் – திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என பேசியிருந்தார். இவரது கருத்துக்கு டி.ஆர்.பாலு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்துகொண்டு கூச்சமில்லாமல் பொய்களைப் பேசுகிறார் ஆளுநர். திடீரென்று திருக்குறளில் “என்நன்றி கொன்றார்கும்” குறளை […]