வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்பதாக சனி, ஞாயிறு அரசு விடுமுறை வருகிறது. எனவே நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு […]
நாட்டில் பேரிடர் காலங்களில், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் திட்டத்தின் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. பேரிடர் காலங்களில் அவசரகால தகவல் தொடர்பு அளிப்பது தொடர்பாக நாடு முழுவதும் இந்த சோதனை தொடங்கியது. அதன்படி, மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக இன்று செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை நடத்தப்படுகிறது. சோதனை அடிப்படையில் 11 மணியளவில் அனைவரது செல்போன்களுக்கு குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபாய எச்சரிக்கை ஒலியுடன் அனைவரது செல்போன்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி […]
வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் தென் இந்தியாவில் தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தல் மிக முக்கியமானதாக உள்ளது. காரணம், தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டு, அதற்கு பிறகான 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சி பெரும்பான்மை பெற்று, சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி மற்றம் நடைபெறாத தெலுங்கானாவில் இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இங்குள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை […]
இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ட்ரான்சிட் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியால் இன்று துவங்கப்படும் பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையான, அதிவேக மெட்ரோ ரயில்களுக்கு, ‘நமோ பாரத்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் சமீப காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிது புதிதாக ரயில்வே துறையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அப்படி அறிமுகப்படுத்தியது தான் வந்தே பாரத் ரயில் சேவையாகும். வந்தே […]
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது நீதிமன்ற காவலும் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதன்பின் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற காவலை தொடர்ந்து, 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து செந்தில் […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் தமிழிசை, டாக்.ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அவரது அஞ்சலி செலுத்தினர். ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அங்கு […]
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இருநாடுகளிலும் 5000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் உணவு, நீர் இன்றி மிகவும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்; காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், […]
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதியும் தேர்தல் […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு ஆளுநர் தமிழிசை, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும், இவரது மறைவையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உடலுக்கு ஆன்மீக தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடலுக்கு ஆளுநர் தமிழிசை, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பங்காரு அடிகளார் மறைவு – இந்தப் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதற்கு குருவாக இருந்தவர். பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது. பங்காரு அடிகளாருக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு..! ஆதிபராசக்தி கோயிலில் மாதவிடாய் காலங்களிலும் […]
517-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
பங்காரு அடிகளார் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி […]
பங்காரு அடிகளார் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு ‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரும், ஆதி பராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன […]
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பங்காரு அடிகளாரின் மறைவை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவில் கருவறையில் பெண்கள் பூஜை செய்யும் பழக்கத்தையும் கொண்டு வந்தவர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் பக்தர்களால் பங்காரு அடிகளார்”அம்மா” என அழைக்கப்பட்டவர். பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதற்கு குருவாக இருந்தவர். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி […]
தமிழக அரசு சார்பில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனம் மூலம் பால் உள்ளிட்ட, பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்ப்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவன பால் ஒரு சில இடங்களில் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். இவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலை ஆதிபராசக்தி கோயில் என்று அழைப்பர். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக உள்ள இவரை வணங்கும், ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களால் பங்காரு அடிகளார் ‘அம்மா’ என்று அழைக்கப்படுகிறார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் […]
கர்நாடக துணை முதல்வரும் , அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சுமார் 7.4 கோடி ரூபாய் கணக்கில் வராமல் இருந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து சட்டவிரோத பணபரிவர்தனைகளை விசாரிக்கும் அமலாக்கத்துறையின் பரிந்துரையின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து தங்கள் விசாரணையை தொடர்ந்தது. இந்த சிபிஐ விசாரணையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுகிறது எனவே சிபிஐ விசாரணைக்கு தடை […]
முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் கேசி பழனிசாமி. இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக போலி உறுப்பினர்கள் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கேசி பழனிசாமிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு […]