கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல்கள் மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இதுவரை அவர் கவிதை தொகுப்பு, நாவல்கள் சிறுகதை தொகுப்பு என 38 படைப்புகளை எழுதியுள்ளார். இந்த நிலையில், 39-ஆவதாக மகா கவிதை என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து மகா கவிதை என்ற தலைப்பில் அறிவுப்போட்டி நடத்துவதாக அறிவித்துள்ளார். 5 எழுத்துகளையும், உள்ளடக்கங்களையும் சரியாக கண்டறிந்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி ‘மகா கவிதை’ […]
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்தார். அதில், பாஜக, காங்கிரஸ், காவிரி விவகாரம் , நீட் தேர்வு முதல் லியோ பட ரிலீஸ் பிரச்சனை வரை தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார் சீமான். தேசிய கட்சிகள் பற்றி கேட்கப்பட்ட போது, இந்தியாவில் தேசிய கட்சி என்று ஒன்று இல்லவே இல்லை. தேசிய கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகளே மாநில அளவில் ஒரு கொள்கையை வைத்து தான் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், புழல் சிறையில் உள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் இவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி இரு முறை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, […]
கட்சி நிகழ்ச்சிகளுக்கும், அரசு நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும், அரசு ஊழியர்களை, திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கட்டாயப்படுத்துவதையும், அரசு எந்திரத்தை கட்சி நிகழ்ச்சிகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்துவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொதுவாக, தமிழக அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட அரசு சார்ந்த அதிகாரப் பூர்வ அறிவிப்புகள், தமிழக […]
சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வாச்சாத்தி விவகாரத்தில் மக்களுக்கு நியாயம் கேட்டு 30 ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட போராட்டம் நடத்தி வந்த நிலையில் வரலாற்று தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இந்த வழக்கில் மக்களுக்கு தீர்ப்பு கிடைத்தாலும், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை நடத்திவரும் பாதயாத்திரை மக்களுக்காக நடத்தப்படவில்லை. மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக […]
உக்ரைன் தெற்கு மைகோலேவ் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததாக மைகோலேவ் கவர்னர் விட்டலி கிம், செய்தியார்களிடம் உறுதி செய்துள்ளார். நேற்று இரவு 8:30 மணிக்கு மைகோலேவ் குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் மொத்தமும் இடிந்துள்ளது. இதனையடுத்து, மீட்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்ற நிலையில், இந்த இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த […]
வரும் திங்கள் மற்றும் செய்வாய் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறை வரவுள்ளதால் ஏற்கனவே சனி , ஞாயிறு என பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகிவிட்டனர். தொடர் விடுமுறை கருத்தில் கொண்டு, வரும் அக்டோபர் 20 வெள்ளி மாலை முதலே சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. 20, 21, […]
இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றார். அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் இஸ்ரேல் செல்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தற்போது இஸ்ரேலின் டெல் அவிவிலுக்கு வந்தடைந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த […]
சென்னை புழல் சிறை ஊழல்கள் நடைபெறுவதாகவும், கையூட்டு (பணம்) தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உண்மையாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது சிறைவாழ்க்கை கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்கு நினைத்தாலும் சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரை செய்வதற்கு ஊழல் நடத்தப்பதாக […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே , விக்கிரமங்கலம், கீழ்ப்பட்டியை சேர்ந்தவர் சுமதி. கணவரை இழந்த இவர் வீட்டருகே பால்பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கணவரின் சொத்துக்கள் தொடர்பாக கணவர் வீட்டாரோடு பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து, கடந்த 16ஆம் தேதி அதிகாலையில் சுமதி வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சமயத்தில் சில மர்ம நபர்கள் , வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் வீட்டின் முன் நிறுத்தி வைத்து இருந்த இரண்டு இரு சக்கர […]
இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில், காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்; காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என்றும், ஹமாஸ் அமைப்பிற்கு பாலஸ்தீனியர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பு, அல்கொய்தா அமைப்பை விட பயங்கரமானது என்றும் […]
கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் எஃப்ஐஆரை ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே சிவகுமாரும் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே, கர்நாடகாவில், கடந்த 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் எரிசக்தி துறை அமைச்சராக இருந்த தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், […]
இந்துத்துவா அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் எனும் RSS அமைப்பு தென் தமிழகத்தில் 20 இடங்களில் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பேரணி நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். தேவர் குருபூஜை , தூத்துக்குடி குலசை தசரா உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி காவல்துறையினர் அனுமதி வழங்காமல் இருந்தனர். இதனை அடுத்து RSS அமைப்பு சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி இளங்கோவன், […]
சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்திக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அதாவது, கோவாவில் இருந்து வாங்கி வந்த ஜேக் ரசல் டெரியர் எனும் இனத்தை சேர்ந்த குட்டி நாயை காங்கிரஸ் மூத்த தலைவரும் தாயாருமான சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார். இந்த நாய்க்குட்டியை சோனியா காந்தி மகிழ்ச்சியாக பெற்று கொண்டார். சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சர்வதேச விலங்குகள் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. இதன்பின் அந்த […]
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜில் புழல் சிறையில் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீன் ஜாமீன் கோரி இரு முறை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இது பாஜகவுக்கு பெரும் பேரிடியாக அமைந்தது. தமிழகத்தில் கணிசமான இடங்களில் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த பாஜகவுக்கு, அதிமுக விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், தேர்தல் நெருங்கும்போது பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் உருவாகும் என அரசியல் கட்சிகள் விமர்சித்தது. ஆனால், இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து விலகியுள்ளேம் என […]
516-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
கோபிச்செட்டிபாளையத்தில் நடைப்பயணத்தின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எந்த மாங்காய் மரம் சுவையாக இருக்கிறதோ அதன்மீது தான் கல்லெடுத்து அடிப்பார்கள். கல்லடிபட்டு தான் அந்த மாங்காய் மரம் மக்களுக்கு மாம்பழத்தை கொடுக்கும். அதே போல் நான் விமர்சனத்திற்கு அஞ்சுபவன் கிடையாது. எனக்கென்று தனி பாணியாக ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியலில் எனக்கு முன்பிருந்த அரசியல்வாதிகள் இப்படி தான் அரசியல் செய்தார்கள் என அப்படிப்பட்ட அரசியலை செய்ய […]
நேற்று சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆயிரம் விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம் குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரிஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மருந்து நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மருந்து பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகள் சோதனையில் […]
ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலத்திற்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒடிசா ஆளுநராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், திரிபுரா ஆளுநராக தெலங்கானாவை சேர்ந்த பாஜக நிர்வாகி இந்திரசேனா ரெட்டி நல்லு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்! ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபர் தாஸ் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் […]