இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இஸ்ரேலுக்கு குறிப்பிட்ட அளவு ராணுவ உதவிகளை அமெரிக்கா செய்து வரும் வேளையில் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பயணத்துக்காக புறப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சில மணி நேரத்திற்கு முன்னர் இஸ்ரேல் தலைநகர் டெல் […]
இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனையடுத்து, இது 21-ம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் வரை […]
சென்னையில் சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், என்னுடைய அனுபவத்தை நீங்கள் போக, போக தானாக தெரிந்து கொள்வீர்கள். அதிமுகவில் உள்ள அனைவருக்குமே முகவரி கொடுத்தது இந்த இயக்கம். எனவே இந்த எல்லாரும் இந்த இயக்கத்தில் இருப்பதாக அனைவரையும் நினைத்து கொள்வேன். எனக்கு பயமே கிடையாது. நான் மக்களை மட்டும் தான் பார்ப்பேன். நாங்கள் திமுக மாதிரி கிடையாது. அதிமுகவாக இருந்தாலும் தப்புனா தப்பு என்று தான் சொல்லுவேன். எங்களுக்கென்று ஒரு வழி உள்ளது. […]
நாகப்பட்டினம் முதல் இலங்கையில் உள்ள காங்கேசன் வரையில் கடல்வழி மார்க்கமாக செல்லும் பயணிகள் சுற்றுலா கப்பல் சேவை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த சுற்றுலா போக்குவரத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவங்கி வைத்து வாழ்த்தினார். மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் எல்லாம் நேரில் வந்து இந்த பயணிகள் சுற்றுலா கப்பல் போக்குவரத்தை துவங்கி வைத்தனர். 150 பேர் பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் இந்த கப்பலில் […]
கடந்த ஒக்டோபர் 7ஆம் தேதி பாலத்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் பாதுகாப்பு வளையத்தை மீறி இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு இஸ்ரேலும் தங்களது பதில் தாக்குதலை தொடர்ந்தன. இந்த மோதலில் இதுவரை திருநாட்டை சேர்ந்தவர்களும் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து , கனடா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன . அதே போல போரை நிறுத்த […]
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் இஸ்ரேலுக்கு இன்று சென்றுள்ள அமெரிக்க அதிபரின் பயணம் ஆபத்தானதா என கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ்இடையேயான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா பகுதியில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, […]
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகள் பழமையான கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எம்மதமும் சம்மதமே, அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்பட்டு வருகிறோம். அனைத்து மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும். சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அண்ணாமலை ஆதாரபூர்வமாக இதுவரை குற்றசாட்டை முன்வைத்துள்ளார். திமுக அமைச்சர்களின் மீது அண்ணாமலை […]
இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , களத்தில் முதலமைச்சர் எனும் திட்டம் கீழ், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் திட்டங்கள், அதன் செயல்முறை பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து அதிகாரிகள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், அரசு திட்டம் அறிவித்தால் அதனை தொய்வு இல்லாமல் விரைவாக முடிக்க வேண்டும். ஒரு திட்டம் […]
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை, தந்தை – மகன் – பேரன் – கொள்ளுப்பேரன் என அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில், மிசோரமில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், அமித்ஷா மகன், ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றார்? […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3 மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 ஆகிய இரண்டு திட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது . இதனை அடுத்து தங்கள் அடுத்தகட்ட பயணங்களை நோக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று டெல்லியில் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி துறையினர்,விண்வெளி துறையில் இஸ்ரோவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி விண்வெளி துறையினருக்கு தனது அறிவுறுத்தல்களை வழங்கினார். அக்.21ல் ககன்யான் […]
எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் காலம் நெருங்கிவிட்டது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுகவை ‘தீய சக்தி’ என்று சொன்ன புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களும் தங்கள் காலம் வரை திமுகவை தலைதூக்கவிடாமல் தமிழக மக்களை பாதுகாத்து வந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சில துரோகிகளாலும், சில சுயநலவாதிகளாலும் அம்மா […]
டெல்லியில் ராகுல் காந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார். நாட்டின் அனைத்து துறைகளிலிருந்தும், ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வருமானத்திலிருந்தும் அதானி அவர்களுக்கு பங்கு சென்று கொண்டுள்ளது. அதற்கு இந்திய நாட்டின் பிரதமர் மோடி துணையாக இருக்கிறார். அதானி குழுமத்தை பிரதமர் மோடி பாதுகாப்பதன் காரணமாகவே பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதானி குழும நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த […]
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி வனவிலங்கு சரணாலயதிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு முல்லை பெரியாறு அணை நீர் தேக்கத்திற்கு ஒரு கிமீக்கு அப்பால் கார் பார்க்கிங் அமைந்துள்ளது. இந்த கார் பார்க்கிங் தேசிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ள இடத்திற்கு அருகே இருப்பதால், வாகனங்கள் எழுப்பும் சத்தம் வனவிலங்குகளை குறிப்பாக புலிகளை அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது என வனத்துறை கேரள அரசிடம் கூறியுள்ளது. இதனை அடுத்து முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பிரமாண்ட கார் பார்க்கிங் […]
வரும் 21ஆம் தேதி காலை 9 மணியளவில், கோவையில் அமமுக சார்பில் கழக செயல்வீரராகள் கூட்டம் நடைபெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட புரட்சித் தலைவர் அவர்களின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும், மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. என சூளுரைத்து ஏழை, எளிய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் விசுவாசமிக்க உண்மைத் தொண்டர்களுமாகிய தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது […]
தமிழக மீனவர்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசின் கூலிப்படை அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கோடியக்கரை அருகில் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றிவளைத்து கொடிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 9 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இரு படகுகள் சேதமடைந்திருக்கின்றன. அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளும், பலநூறு கிலோ […]
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதியும் தேர்தல் நடையேற உள்ளது. இதுபோன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவ.14ம் தேதியும், ராஜஸ்தானில் […]
இஸ்ரேல் – ஹமாஸ் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு சர்வதேச அரசியல் நிகழ்வுகளும் இந்த போரின் விளைவாக ஏற்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொதுமக்கள், குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா பகுதியில் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவு உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த இரு தரப்பு போரை நிறுத்த கோரி, உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு […]
சமீப காலமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள், ஏற்கனவே அரசு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும், களஆய்வு கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் விற்பனையை தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். அந்தவகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக நிர்வாகிகளும் பாஜகவில் கூட்டணி இல்லை என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்திலும், பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என அனைவரிடமும் அழுத்தம் […]
நேற்று காசாவில் உள்ள அல் அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். குழந்தைகள் நிறைந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் , சிகிச்சை பெற்றவர்கள் […]