அதிமுகவின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கேபி முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர். இதுபோன்று, அதிமுக துவங்கி 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவையில் கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்த பிறகு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா […]
தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி 4 மாவட்டங்களில் இன்று முதல்வர் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நிலையில் முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டில் முதல் வருகையை முன்னிட்டு, இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. […]
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையான போர் தாக்குதல் 11வது நாளாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக ஹமாஸ் அமைப்பினர் தலைமையிடமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் என தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐநாவில் உறுப்பு நாடுகள் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. இருந்தும் […]
அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 2023 முதல் இக்கல்வியாண்டிற்கான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 2023 அக்டோபர் மாதத்தில், […]
இஸ்ரேல் மீது பாலத்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தற்போது வரை தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை சுமார் 3000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த போர் காரணமாக காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு […]
ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக அங்கீகரிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரிய வழக்கில் 4 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரச்சூடு, நீதிபதி ரவீந்திர பாட், நீதிபதி நரசிம்மா, நீதிபதி […]
திரைத்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும், லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அக்டோபர் மாதத்தில் மட்டும் கூடுதலாக 5,041 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மொத்தம் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் […]
தற்போது மழை காலம் என்பதால் அரசு சார்பில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் 10 வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பம் ஜேஜே நகரை சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் சக்தி […]
ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரிய வழக்குகள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள், தங்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுவில் ஏற்கனவே உள்ள சிறப்பு திருமண சட்டத்தின் […]
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே இன்று 11-வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி முதல் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹாமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இவர்களின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரையில் இந்த போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதுவரை 3.3 லட்சம் ராணுவ வீரர்களை காசா பகுதி எல்லையில் […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் – நாகஜோதி தம்பதி. இவர்களுக்கு கடந்த7ஆம் தேதி 3வதாக பெண் குழந்தை ஒன்று அவர்கள் வாழும் பகுதி நகர மருத்துவமனையில் பிறந்துள்ளது. அண்மையில் அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதியினர் அந்த குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள மகப்பேறு பெண் மருத்துவர் அனுராதா என்பவர் சிகிச்சை பார்த்துள்ளார். அதன் பிறகு லோகம்மாள் என்பவர் தம்பதியை தொடர்பு […]
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், ப்ரோமஷன் பணிகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் […]
தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொள்வார். திட்டத்தின் செயல்பாடு தாமதமாக இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரிந்துகொண்டு அதனை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வார். இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம் என அதிமுக […]
514-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
மகாராஷ்டிர மாநிலம் சிப்லூனில் மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் நகரில் மதியம் 2:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் சிப்லுன் என்ற இடத்தில் கட்டுமானப் பணியில் இருந்த மேம்பாலம் தூண் இடிந்து விழுந்தது. சிறிது நேரத்தில் மேம்பாலத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேன் இயந்திரம் சேதமடைந்தது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் […]
26 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரி திருமணமான பெண்ணின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் ஒன்றை அளித்தார். அதில், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மற்றும் மோசமான நிதி நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது 26 வார மூன்றாவது கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க வேண்டும் தெரிவித்து இருந்தார். இதை அக்டோபர் 9 ஆம் தேதி விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பெண்ணின் மனுவிற்கு அனுமதி […]
தமிழகத்தையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் கடந்த மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் , தர்மபுரி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் சோதனையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது 18 பெண்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது . இந்த புகாரின் பெயரில் 269 பேர் மீது காவல்துறையினர் […]
மகாராஷ்டிராவின் அகமத் நகரில் இருந்து அஸ்தி நகருக்கு சென்ற புறநகர் பயணிகள் ரயில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நாராயண்தோஹ் மற்றும் அஹமத்நகர் பிரிவுக்கு இடையில் பிற்பகல் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது. அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவிய தீயால் 5 பெட்டிகள் மொத்தமாக எரிந்து நாசமானது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மாலை 4.10 மணியளவில் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக தீ பரவுவதற்கு முன்னர் பயணிகள் அனைவரும் […]