மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலில் தீ விபத்து! அடுத்தடுத்த 5 பெட்டிகள் எரிந்து நாசம்…

மகாராஷ்டிராவின் அகமத் நகரில் இருந்து அஸ்தி நகருக்கு சென்ற புறநகர் பயணிகள் ரயில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நாராயண்தோஹ் மற்றும் அஹமத்நகர் பிரிவுக்கு இடையில் பிற்பகல் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது.
அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவிய தீயால் 5 பெட்டிகள் மொத்தமாக எரிந்து நாசமானது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மாலை 4.10 மணியளவில் தீயை அணைத்தனர்.
நல்வாய்ப்பாக தீ பரவுவதற்கு முன்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்றும், யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதா அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாக வில்லை. தற்போது, விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலில் காவலர் பக்க பிரேக் வேனில் ஏற்பட்ட தீ, வேகமாக அருகில் இருந்த நான்கு பெட்டிகளுக்கும் பரவியது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சிலருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025