மத்திய இணையமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான எல்.முருகன் இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது அவரிடம் , கடந்த சனிக்கிழமை அன்று குஜராத் , அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் வீரர்களை பார்த்து சிலர் ஜெய் ஸ்ரீ ராம் […]
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால், இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருவதால், பள்ளி அமைந்துள்ள பகுதிகளின் சூழ்நிலையை பொறுத்து விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த கல்வி நிறுவனங்களே முடிவு செய்யலாம் என மாவட்ட முதன்மை […]
சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. அதாவது, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாற்றுத்திறனாளி நலத்துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்பட்டது. தமிழகத்தில் ரூ.1,763 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், துறை சார்ந்து அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது முதலமைச்சர் […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் – நாகஜோதி தம்பதி. இவர்களுக்கு கடந்த7ஆம் தேதி 3வதாக பெண் குழந்தை ஒன்று அவர்கள் வாழும் பகுதி நகர மருத்துவமனையில் பிறந்துள்ளது. அண்மையில் அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு தம்பதியினர் அந்த குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள மகப்பேறு பெண் மருத்துவர் அனுராதா என்பவர் சிகிச்சை பார்த்துள்ளார். அதன் பிறகு லோகம்மாள் என்பவர் தம்பதியை தொடர்பு […]
சென்னை பாடியில் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பேசினார். இந்த சந்திப்பின்போது, பிரக்ஞானந்தாவுக்கு GSLV ராக்கெட்டின் மாதிரியை பரிசாக வழங்கினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். மேலும், எதிர்வரும் போட்டிகளில் அனைத்திலும் சிறப்பாக விளையாட பிரக்ஞானந்தாவுக்கு இஸ்ரோ தலைவர் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ […]
அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம், 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலும் ஒரே நாளான டிசம்பர் 3ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை கைப்பற்றி, பாரதிய ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. சந்திரசேகர ராவ் மீண்டும் தெலுங்கானா […]
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, கில் 1996 முதல் 2001 வரை தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். 2004 இல் காங்கிரஸில் இணைந்தார். அவர் தேர்தல் ஆணையராக பதவி வகித்ததற்காக பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதே அவரது முக்கிய சாதனையாகும். இவர் தேர்தல் ஆணையராக இருந்த போது, 1998 இல் 12வது மக்களவைக்கும் 1999 இல் 13வது மக்களவைக்கும், பொதுத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது. காங்கிரஸ் […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பழமையான சமுதாயக் கூட மேற்கூரை இடிந்து […]
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி (சனிக்கிழமை) இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். காசாவில் இருந்து ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் இஸ்ரேலியன் நகருக்குள் ஊடுருவியும் பயங்கர தாக்குதலை நடத்தினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் தொடங்கியது. ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க […]
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே இன்று 10-வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹாமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இவர்களின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரையில் இந்த போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதுவரை 3.3 லட்சம் ராணுவ வீரர்களை காசா பகுதி எல்லையில் […]
சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலங்கை கைது மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்தில் நாளை மறுநாள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நேற்று முன்தினம் ராமேஸ்வரம் […]
சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மறைந்த அம்மையார் ஜெயலலிதா தைரியமாக கேட்டார் மோடியா..? லேடியா என்று கேட்டார். ஆனால், அம்மையாரின் மறைவுக்கு பின், இவர்கள் மோடி தான் எங்கள் டாடி என்கிறார்கள். மக்கள் பிரச்சனையை பேச சொன்னா சீட்டுக்கு சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுகவுக்கு இப்போவுமே பிரச்னை நாற்காலிதான். பாஜகவும், அதிமுகவும் கூட்டணி முறிவு என்ற நாடகத்தை […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது, கரூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக கரூர் ஆட்சியர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் பாதயாத்திரை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை […]
அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் புறநகர் பகுதியில் ‘ஜெய் பீம்’ கோஷங்கள் எதிரொலிக்க அம்பேத்கரின் 19 அடி மிக உயரமான சிலை முறைப்படி திறக்கப்பட்டது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் புறநகர் பகுதியில் அம்பேத்கரின் 19 அடிமிக உயரமான சிலை முறைப்படி திறக்கப்பட்டது. அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அம்பேத்கருக்கு வைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலை இதுவாகும். இந்த சிலைக்கு சமத்துவத்தின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு […]
513-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
சத்தீஸ்கரில் 30 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 3 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதாவது இன்று வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிடும் என்று முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்திருந்தார். முதல் பட்டியலில் […]
டெல்லி என்சிஆர் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று மாலை 4:08 மணியளவில் காசியாபாத், நொய்டா உள்ளிட்ட தேசிய தலைநகர் பகுதி முழுவதும் உணரப்பட்டது. அதன் நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக இருந்ததாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. அதன் மையம் ஃபரிதாபாத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் கிழக்கே ஏற்பட்டதாக […]
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான தாக்குதல் 9வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதில் தற்போது இஸ்ரேல் கையே ஓங்கி நிற்கிறது. ஹமாஸ் அமைப்பை விட பலம் வாய்ந்த இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தொடர் தாக்குதல், போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு. ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக இதுவரை 4 விமானங்கள் மூலம் 918 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இஸ்ரேல் To […]