களஆய்வு கூட்டம்: காவல்துறையினர் மீது நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

Tamilnadu CM MK Stalin

சமீப காலமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள், ஏற்கனவே அரசு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும், களஆய்வு கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் விற்பனையை தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

அந்தவகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். நேற்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் களஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார். இந்த 4 மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் களஆய்வு கூட்டம் நடத்தினார்.

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை..!

இரண்டாவது நாளாக களஆய்வு முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விவாதித்தார். இதன்பின் பேசிய முதல்வர், பள்ளி, கல்லுரி அருகே பெட்டிக்கடைகளில் போதைப்பொருள் விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினருக்கு தெரியாமல் போதைப்பொருள் விற்பனை நடக்க வாய்ப்பில்லை என சிலர் கூறுகின்றனர்.

நான் நம்பவில்லை என்றாலும், உயரதிகாரிகள் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், போதைப்பொருள் புழங்கக்கூடிய பகுதிகளில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பல்வேறு குற்ற நிகழ்வுகளுக்கு மையப்புள்ளியாக போதைப்பொருள் இருந்து வருகிறது.

தங்கள் மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முடக்குவது மாவட்ட எஸ்பிகளின் கடமை. காவல்துறையினர் மீது நல்லெண்ணம் ஏற்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. முதல்வரின் முகவரியில் வரும் கோரிக்கைகளை களைய நானே களம் இறங்கி உள்ளேன். குற்றத்தடுப்பில் முக்கியமானது போதைத் தடுப்பு ஆகும்.  காவல்துறையினர் சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்