விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண மண்டப கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்த ஒரு பெண் பலி, ஐந்து பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிவகாசி வள்ளலார் தெருவில் அரசன் கணேசன் என்ற தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் பின் பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்டபத்தை புதுப்பிப்பதற்காக இடித்த போது அருகிலுள்ள குடியிருப்பின் மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் பக்கத்தில் இருந்த வீடுகளின் மீதும் சாய்ந்தால் 55 வயதான கன்னியம்மாள் என்பவர் இடிபாட்டில் மாட்டிக்கொண்டு உயிர் இழந்தார். மற்றும் மண்டபத்துக்கு அருகே இருந்த சில வீடுகளும் சேதமடைந்தன. இதில் ஞான நாகம்மாள், அங்கம்மாள், சண்முகத்தாய், ஈஸ்வரி,நிஷா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…