சென்னை ஆவடியில் உள்ள காமராஜ் பெண்கள் மேல்நிலைபள்ளியை சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பு 4 மாணவிகள் ஆவர்.இந்நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர்.
ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் மாணவிகள் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.
பின்னர் இதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆவடி காவல்துறையினர் மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இதன் காரணமாக மாணவிகள் குறித்து சென்னை மாநகர அனைத்து காவல்நிலையங்களிலும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட நகரின் முக்கிய இடங்கள் அனைத்திலும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன அனைத்து மாணவிகளும் பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து மாணவிகளின் பெற்றோருடன் காவல்துறையினர் பெங்களூரு விரைந்தனர்.
பின்னர் பெங்களூரு ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த நான்கு மாணவிகளை அங்கிருக்கும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.பிறகு அங்கு சென்ற தமிழக காவல்துறையினரும் பெற்றோரும் மாணவிகளை மீட்டு வந்துள்ளனர்.
அந்த 4 மாணவிகளிடம் காவல்துறைனையினர் எதற்காக பெங்களூரு சென்றீர்கள்? என விசாரணை நடத்தியுள்ளனர்.அதற்கு செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி கொண்டிருந்ததால் பெற்றோரும் ஆசிரியரும் கண்டித்ததாக கூறியுள்ளனர்.
இதனால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாத எண்ணத்தில் பெங்களூரு சென்றதாக கூறியுள்ளனர்.இந்நிலையில் காவல்துறையினர் மாணவிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…