திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள லலிதா ஜிவல்லரியில் கடந்த 1-ம் தேதி கடையின் சுவரை துளையிட்டு பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் 48 மணி நேரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடித்தனர்.
திருவாரூர் நடத்திய வாகனசோதனையில் இருச்சக்கரத்தில் தப்ப முயன்ற மணிகண்டனை போலீசார் விரட்டி பிடித்தனர். ஆனால் அவருடன் வந்த சுரேஷ் தப்பித்து விட்டார். இதை தொடர்ந்து போலீசார் முருகன், சுரேஷ் ஆகிய முக்கிய கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இதில் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரை தொடர்ந்து முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.இந்நிலையில் முருகன் அளித்த தகவலின் பேரில் பெங்களூர் போலீசார் முருகனை பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டைக்கு கொண்டு வந்தனர்.அங்கு முருகன் சொன்ன இடத்தைத் தோண்டியபோது11கிலோ தங்க நகைகளை பெங்களூர் போலீசார் மீட்டு எடுத்துச் சென்றனர்.
அப்போது பெரம்பலூர் போலீசார் அவர்களை துரத்திச் சென்று நகைகளை மீட்டனர். மீட்கப்பட்ட நகைகள் அனைத்தும் லலிதா ஜுவல்லரி கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் எனத் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…