கடந்த 26-ம் தேதி கோவை கீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஐஸ்வர்யா நகர் என்ற பகுதியில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்றில் சக நண்பர்களுடன் 11-ம் வகுப்பு படிக்க கூடிய மாணவி ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான சென்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இரவு நேரம் என்பதால் மாணவியுடன் வந்த சக மாணவனான மணிகண்டன் என்பவர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து அவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது . இந்த சூழ்நிலையில் அதனை மற்றொரு நபர் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி போது வீடியோ எடுத்து உள்ளார். மேலும் 4 பேர் வெளியிலிருந்து யாரும் வராமல் தடுத்து நிறுத்த உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை முதல் கட்டமாக காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மொத்தம் ஆறு பேர் அதில் நான்கு பேர் இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்து உள்ளனர். அதில் மீதம் உள்ள இரண்டு பேரில் மணிகண்டன் என்பவர் முக்கிய குற்றவாளியாகவும் அவர்களை தேடுவதற்காக காவல்துறை தற்போது தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட கார்த்திகேயன், நாராயண மூர்த்தி,ராகுல் மற்றும் பிரகாஷ் ஆகிய நால்வரையும் ஆர்எஸ் புரம் மகளிர் காவல் துறையினர் கைது செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…