12th Result: நாளை வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.! அரசு தரப்பில் முக்கிய அறிவிப்பு…

12th Exam Result 2023

நீட் தேர்வுகள் இன்று நடைப்பெற உள்ள நிலையில், மே 8 (நாளை) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

நடந்து முடிந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு  வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரிசின் முக்கிய அறிவிப்பு:

12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு நாளை வெளியாகவுள்ள நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுக்கு பின், உயர்கல்வியில் சேர்வதற்கு ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், எந்த கல்லூரியில் சேருவது, எந்த படிப்பில் சேரலாம், உயர்கல்விக் கடன் எப்படி பெறுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுகு விளக்கம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 அன்பில் மகேஷ் பேட்டி:

முன்னதாக, திட்டமிட்டபடி, மே 5-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானால் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படலாம், இதனால், நீட் தேர்வுக்கு பின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்