#Breaking: 9 மணி நிலவரம்.. தமிழகத்தில் 13.80 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.
இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்.அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவித வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20.25 வாக்குகள் பதிவானதாகவும் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025