#Breaking: வாக்குபதிவை நிறுத்திய தோப்பு வெங்கடாச்சலம்.. பூத் முன் அமர்ந்து தர்ணா!

Thoppu Venkatachalam complained that he had changed the order of the voting machine at the polling booth in Perundurai constituency.

ஈரோடு பெருந்துறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் வரிசையை மாற்றி வைத்ததாக புகாரளித்த தோப்பு வெங்கடாச்சலம், வாக்குபதிவை நிறுத்தி, பூத் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

தமிழகம் முழுவதும் மக்கள் சிரமமின்று வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு பெருந்துறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் வரிசையை மாற்றி வைத்ததாக சுயேச்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் புகாரளித்தார். மேலும் அவர், வாக்குபதிவை நிறுத்தி, பூத் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.