கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ராயபுரம் மண்டலத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதியும்
சேப்பாக்கம் தொகுதியின் 2 வார்டுகளும், எழும்பூர் தொகுதியின் 2 வார்டுகளும் ராயபுரம் மண்டலத்தில் அடங்கும்.
ராயபுரம் தொகுதியில் 1, 715 பேருக்கும், துறைமுகம் தொகுதியில் 1,456 பேருக்கும் ,சேப்பாக்கத்தின் 2 வார்டுகளில் 406 பேருக்கும், எழும்பூரின் 2 வார்டுகளில் 630 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 நாள் சீரக குடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள்தூள், உப்பு தலா ஒரு சிட்டிகை சேர்த்து காய்ச்சி பருகலாம் எனவும் தெரிவித்தார்.
சென்னை ராயபுரம் மண்டலத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…