முதல் முறையாக 17 வயது சிறுமி கொரோனாவால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.!

Published by
கெளதம்

சென்னையில் 17 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 167 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,9,459 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 9,066 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது.

இந்நிலையில் சென்னையில் 17 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளார் 3 ஆம் தேதி மாலை 5.28 சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இரவு 9.35 மணிக்கு உயிரிழந்தார். இதற்கு முன்னதாக இரண்டாம் தேதி அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில்  கொரோனா பாஸிட்டிவ் உறுதியானது. ஏற்கனவே அந்தபெண்ணுக்கு முதல் வகை நீரிழிவு நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12  பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 14,901  ஆக அதிகரித்தது.

 

Published by
கெளதம்

Recent Posts

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

27 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

4 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

5 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago