சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிவாரணம்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

விழுப்புரம் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், இன்று காலை சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று மீன் வாங்க காத்துக் கொண்டிருந்த லட்சுமி,கோவிந்தம்மாள்,கெங்கையம்மாள் ஆகிய மூன்று பேர் மீது மோதியது. இதில் 3 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாயகம், கேமலம்,பிரேமா ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், பலத்த காயமடைந்த நாயகம்-க்கு 1 லட்சமும், காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்
உத்தரவிட்டுள்ளேன்” என அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.