நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் யாதவர் தெரிவை சேர்த்தவர் சுரேஷ் என்பவரின் மகன் 2 வயதுடைய மகேஷ் என்ற குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி வேன், அந்த குழந்தையின் மீது மோதியதாக கூறப்படுகிறது. பின்னர் இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் அருகில் இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தையை உடனடியாக உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குழந்தையின் தாயார் இசக்கியம்மாள் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்ட்டர் ஜீடி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இட்டமொழியை சேர்ந்த வேன் டிரைவர் 20 வயதுடைய செல்வின் என்பவரை கைது செய்தனர். பின்னர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…