இன்று 202 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம் !

Published by
பாலா கலியமூர்த்தி

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு மீண்டும் இன்று 202 மையங்களில் தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி இங்கு நடைபெறவில்லை. 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி, 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதையடுத்து, கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பலமுறை ஒத்திவைக்கப்பட்ட விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் இன்று தொடங்குகிறது. 48 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி 67 மையங்களில் முதலில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி அங்கு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். 

மேலும், விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொரோனா தொற்று ஏற்படாமல் கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி விட்டு பணி செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கு 3 முகக்கவசங்கள் வழங்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கும் என்று தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்களுக்கான விடைத்தாள்கள் காலையில் 15, மாலையில் 15 என திருத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

22 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago