இன்று முதல் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும்!

இன்று முதல் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பெற்று கொண்டார். அதன் பிறகு சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்பட கூடிய தடுப்பூசி மையத்தை திறந்து வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் குறிப்பிடத்தக்க இலக்கை எட்டி கொண்டிருப்பதாகவும், ஆகஸ்ட் 23 முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன் படி இந்த திட்டம் இன்று சென்னை ராஜீவ்காந்தி ஓமந்தூரார் ஸ்டான்லி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தொடங்கி வைக்கப்பட்ட உள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை அதிகப்படுத்தும் விதமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025