CPIProtest: மோடி அரசுக்கு எதிராக இன்று முதல் 3 நாட்கள்… இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்!

CPI protest in vilupuram

விலைவாசி உயா்வு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இன்று முதல் 14ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அறிவித்திருந்தார். இதுதொடர்பாக  கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மத்திய பாஜக அரசு, மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்துகிறது.

எனவே, பிரதமர் மோடி தலைமையிலான அரசே வெளியேறு என வலியுறுத்தி செப்.12, 13, 14 ஆகிய தினங்களில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது என்றுள்ளார். “மோடி அரசே வெளியேறு” என்ற முழக்கத்தை முன்வைத்து இன்று முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் இன்று முதல் 3 நாட்களுக்கு நூற்றுக்கணக்கான மையங்களில் நடக்கும் மறியல் போராட்டத்தில் பல்லாயிரம் பேர் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், மறியல் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்குமாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையிலெடுத்து ஆளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தியது.

மணிப்பூர் பிரச்சனை, விலைவாசி உயர்வு,  வேலையில்லா திண்டாட்டம், அதானி விவகாரம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்,  மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்