,

காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழப்பு.!

By

பாதாளச்சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில், அப்பகுதி துப்புரவு பணியாளர்களான முருகன், பாக்யராஜ், ஆறுமுகம் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதால் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்த்துறை விசாரணை நடத்தி, உடல்களை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023