தமிழகத்தில் 3 கட்டமாக நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு நிறைவு!

தமிழகத்தில் 3 கட்டமாக நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்து விட்டதாக தமிழக தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு காலி இடங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் 461 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் இருந்ததால் அதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த கலந்தாய்வு மூன்று கட்டமாக நடைபெற்றது. இந்த ஆண்டு 90 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அண்மையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தற்பொழுது நிறைவு பெற்றுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களில் 71 ஆயிரத்து அதிகமான இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025