35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது- கூட்டுறவுத்துறை..!

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற சட்டமன்றத்தில் சட்டப் பேரவை விதி எண் 110 கீழ் நகை கடன் தள்ளுபடி அறிவித்தார்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நகை கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வு சேலம் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் முடிந்துள்ளது.
ஏற்கெனவே மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு. அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி பெறாத தேர்வுகள் என்று முடிவு செய்யப்பட்டு, அந்தப் பட்டியல்கள் அனைத்தும் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எக்செல் படிவத்தில் பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தன.
அதன்படி,
- 2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர்
- நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள்
- 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினர்
- 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள்,
- கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்
- கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்
- குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்
- ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள்
- எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர்
- ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோர் நகை கடன் தள்ளுபடி பெறாத தேர்வர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025