திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ரூ.13 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் , மதுரையை சேர்ந்த கணேசன் மற்றும் கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளிகளான கனகவல்லி மகன் சுரேஷ் சங்கம் நீதிமன்றத்திலும் ,கொள்ளை கும்பல் தலைவனான முருகன் பெங்களூருவில் உள்ள 11-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி பெங்களூர் போலீசார் முருகனை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி முருகனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஒரு வாரம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
லலிதா ஜுவல்லரியில் மொத்தமாக 28 கிலோ 750 கிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் தற்போது 24 கிலோ 550 கிராம் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 கிலோ 200 கிராம் நகையை இன்னும் போலீசார் கைப்பற்றவில்லை. இதுபற்றி முருகனிடம் போலீசார் விசாரித்தில் தன்னிடம் இனிமேல் எந்த வித நகையும் இல்லை என முருகன் கூறியுள்ளார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் சுரேஷ் மனைவி கீதா மற்றும் மதுரை சார்ந்த இரண்டு நகை வியாபாரிகளை போலீசார் வரவைத்து அவர்களிடம் முருகன் ஏதாவது நகை கொடுத்தாரா என விசாரணை செய்தனர். ஆனால் அவர்களிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மீதமுள்ள 4 கிலோ 200 கிராம் நகையை முருகனிடம் இருந்து வாங்க போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் முருகனை காவலில் வைத்து விசாரிக்க இன்றுடன் முடிவடைந்த நிலையில் போலீசார் முருகனை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…