கடலூர் மாவட்டம் அக்ராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அப்பகுதியில் உள்ள அருண்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் அருண்ராஜ் , ஜெயஸ்ரீ இருவரும் வீட்டின் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் ஜெயஸ்ரீ 5 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார்.அப்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையெடுத்து அருண்ராஜ் வீட்டினர் வளைகாப்பு நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீக்கு தங்க விலையில் போட சொல்லி கூறியுள்ளனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீ குடும்பத்தினர் தங்க வளையல் போடவில்லை.
இதனால் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கும், அருண்ராஜ் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது.இந்த தகராறில் ஜெயஸ்ரீயின் சகோதரர் அருண்ராஜை தாக்கியுள்ளார். பின்னர் இரு குடும்பத்தினரும் சமாதானம் ஆகி உள்ளனர்.இதையெடுத்து ஜெயஸ்ரீ அழைத்துக் கொண்டு அருண்ராஜ் புதுச்சேரி வந்து உள்ளனர். புதுச்சேரி வந்த சில நாட்கள் கழித்து ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அருண்ராஜ் குடும்பத்தினர் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு கூறி உள்ளனர்.
ஜெயஸ்ரீயின் தாய் விஜயா தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…