சென்னையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு – மாநகராட்சி ஆணையர்

Published by
லீனா

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதால், மழை தெண்ணீர் தேங்கி தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாளை பொதுவிடுமுறை..! தனியார் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்..!

அதனபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள், நீர்நிலைகள், கடற்கரையோரம் வசிப்பவர்கள்  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில், 2.43 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.

மழையால் இதுவரை உயிரிழப்புகள் இல்லை. இன்னும் சில மணி நேரங்களில் மலையின் தாக்கம் குறையும் என நம்புகிறோம். அனைத்து தரப்பினரும் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்கின்றனர். மழைப்பாதிப்பு குறித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago