புதுச்சேரி மாவட்டத்தில் ATM-ல் பணம் எடுக்கத் தெரியாதவரிடம் 50,000 மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாவட்டம் கிருமாம்பாக்த்தில் வசித்து வந்தவர் லட்சுமணன், இவர் கிருமாம்பாக்த்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ATM- ல் பணம் எடுக்கத்தெரியாததால் பணம் எடுக்க தெரிந்தவர்களை அழைத்து வந்து செலவிற்காக பணம் எடுத்து வந்துள்ளார், அந்த வகையில் தனது உறவினர் வீடிற்கு சென்று தனது வீட்டிற்கு செல்லும் போது பணம் எடுக்க ஒரு நபரிடம் உதவி கேட்டுள்ளார்.
அப்பொழுது அந்த நபர் ATM கார்டை வாங்கிவிட்டு ரகசிய இலக்கத்தை போட்டுவிட்டு ATM கார்டு வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார், இதனால் லட்சுமணன் திரும்பி சென்றுள்ளார் ஆனால் சிறிது நேரம் கழித்து லட்சுமணன் தொலைபேசிக்கு 50,000 தனது வங்கிக்கணக்கில் பறிபோனது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் லட்சுமணன் உடனடியாக வங்கியில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்த பொழுது சென்னையில் உணவகத்தில் வேலை செய்து வந்த முருகன் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…