அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்படுகிறது என்றும் இதற்கான நேர வரம்பு எதும் குறைக்கப்படவில்லை என முதல்வர் தெரிவித்துள்ளது. அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைத்திட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தலைமையில் இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஊபர், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு தடை தொடர்கிறது என்றும் கிராமம், நகரங்களில் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் சுய உதவி குழுக்கள் ஆகியவை தினசரி/வராந்திர/ மாதவட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது யாரும் வேலைக்கு செல்ல இயலாததால், இது போன்ற பணவசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பண வசூலை நிறுத்தி வைக்காமல், இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் என்றும் தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என தெரிவித்தார். பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025