வேலூர் மாவட்டத்தில் உள்ள லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிவேதினி (14) இவர் சென்னாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை நிவேதினி வகுப்பறையில் இருக்கும் போது மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து விட்டு கே.வி குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மாணவி மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் இறப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில் , தங்கள் மகளுக்கு வலிப்பு வந்ததாக கூறி பள்ளியிலிருந்து தகவல் கிடைத்தது. பின்னர் நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். மேல்சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும்போது நிவேதினி இறந்துவிட்டார்.மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே எங்கள் மகள் இறப்புக்கான காரணம் தெரியும்..? என கூறினார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…