17 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த 17 வயது மாணவன்!திடுக்கிடும் தகவல்!

தஞ்சாவூரை அடுத்து வல்லம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி மஞ்சுளா.மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு செல்லும் போது நேற்று முன்தினம் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் அந்த மாணவியை அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த தகவல் வல்லம் அனைத்து மகளீர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த மகளீர் காவல் துறை அதிகாரி மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளார்.அதில் தஞ்சாவூரை அடுத்து பிள்ளையார்பட்டியை சேர்ந்த ஐடிஐ படிக்கும் மாணவன் குமார் என்பவர்,மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை கற்பழித்து வந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக தான் அந்த மாணவி கர்பமடைந்துள்ளார்.இதன் காரணமாக பள்ளி மாணவி மஞ்சுளா கொடுத்த புகாரின் அடிப்படையில் மகளீர் காவல் துறையினர் ஐடிஐ மாணவன் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்துள்ளனர்.
மேலும் மாணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025