தேர்தல் விதிகளை மீறினாரா நடிகர் விஜய்? சென்னை போலீசில் பறந்தது புகார்.!

Published by
கெளதம்

Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தனது ஜனநாயக கடமையாற்ற பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர்.

இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார், அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. அவரை சுற்றி ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர் வாக்களிக்க செல்வதற்கு வழிவிடாமல் சூழ்ந்து கொண்டனர்.

இதனால், அவர் வாக்களிக்க சென்ற வாக்குச்சாவடி சிறிது பதற்றத்துடன் காணப்பட்டது.  தற்பொழுது, தேர்தல் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று விஜய் வாக்களித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால், தமிழக வெற்றிக் கழக்கத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். விரைவில் இது குறித்து விரிவான விளக்கத்தை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…

30 minutes ago

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

1 hour ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

2 hours ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

2 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

3 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

4 hours ago