Bomb [Imagesource : Representative]
திருச்சிமாவட்டம் திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி மணிகண்டன் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆட்டோ ட்ரைவர் முருகன் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் மணிகண்டனின் எதிரிகள் அவரை தாக்குவதற்கு பல வகைகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவமும் அவரை பழிவாங்கும் நடவடிக்கை தான் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவரது வீட்டின் அருகே கறி கடை மற்றும் சில கடைகள் உள்ளது. இந்த நிலையில், வீட்டிற்குள் இருக்க கூடிய மணிகண்டன் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டும் என்ற முனைப்பில் தான் இந்த நாட்டு வெடிகுண்டு அவரது வீட்டில் வீசப்பட்டுள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், அடையாளம் தெரியாத 3 பேர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றதை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், முருகனின் ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…
அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…
பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…
மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…