தமிழகத்தில் இருந்து ஒடிசா விரைந்த மருத்துவக் குழு..!

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவக்குழு தமிழகத்தில் இருந்து ஒடிசா விரைந்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில், தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், இந்த ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவக்குழு தமிழகத்தில் இருந்து ஒடிசா விரைந்துள்ளது.
காயம் அடைந்தவர்களும் சிகிச்சை அளிக்க சென்னையில் தயார் நிலையில் 4 அரசு மருத்துவமனைகள் உள்ளது. மேலும், மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.